polimernews images

Discover Best polimernews Images of World

#food #travel #sports #news #may #monday

சினிமாவில் நிறைய பெண் இயக்குநர்கள் வரத் தொடங்கிவிட்டதால் ஆண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நடிகை நளினி கருத்து.... பெண்கள் முன்னால் சென்றாலும் ஆண்கள் எப்போதும் "கிங்" தான் என்றும், தாங்கள் பின்னால் நிற்கும் பிரின்ஸ் தான் என்றும் பேட்டி... #polimer #polimernews #cinema #filmmakers #womenfilmmakers #men #actressnalini

5/20/2024, 6:33:25 AM

மும்பையில் தனது வீட்டின் அருகில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்... அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமை ஆற்ற வருமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு... #polimer #polimernews #mumbai #election2024 #voting #actressjanvikapoor

5/20/2024, 6:32:26 AM

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது: வானிலை மையம் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் வரும் 22-ஆம் தேதி வரை அதி கனமழைக்கான வாய்ப்பு தொடர்கிறது: வானிலை மையம் தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் 23-ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் #polimer #polimernews #tamilnadu #rain #alert

5/20/2024, 5:52:55 AM

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சரும் உயிரிழப்பு அஜர்பைஜான் எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக தகவல் ஈரான் அதிபர் பயணம் செய்த ஹெலிகாப்டர் அடர்ந்த வனப்பகுதியில் மோசமான வானிலையால் விபத்தில் சிக்கியது விபத்து நேரிட்ட 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தகவல் ஈரான் அதிபருடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவு அமைச்சர் ஹோசின் அமீர் அப்துல்லாஹியானும் உயிரிழந்தார் #polimer #polimernews #iran #ibrahimraisi #rip #helicopter #accident

5/20/2024, 5:40:21 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தியாகராஜபுரத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது பேரக் குழந்தைகள் அங்கிருந்த சீனிபழ மரம் என்றும் அழைக்கப்படும் இச்சிலி மரத்திலிருந்து பழங்களைப் பறித்து சாப்பிட்டுள்ளனர். இதனைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரரான இளையராஜா, மது போதையில் அவர்களை ஆபாசமாகப் பேசவே, சண்முகம் தட்டிக்கேட்டுள்ளார். வாய்த்தகராறு கைகலப்பாக மாறி, இளையராஜா சண்முகத்தை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. சண்முகம் உயிரிழந்த நிலையில், இளையராஜா கைது செய்யப்பட்டுள்ளான். இதனிடையே அரிவாளை கையில் வைத்துக் கொண்டு இளையராஜா மிரட்டல் விடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளன. #polimer #polimernews #kallakurichi #fruits #rip #arrest

5/20/2024, 5:30:43 AM

விழுப்புரம் நகரை ஒட்டிய விராட்டிக்குப்பத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த வீட்டின்மேல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த கிஷோர் ராகவ், கிருத்விக் என்ற சிறுவர்கள் தாழ்வாகச் சென்ற மின்கம்பியைத் தொட்டதில் கிஷோர் ராகவ் உயிரிழந்தார். கிருத்விக் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இதே வீட்டில் கட்டுமானத் தொழிலாளி ஒருவரை மின்சாரம் தாக்கிய நிலையில், கட்டுமானத்தை மாற்றி அமைக்குமாறு நகராட்சி சார்பில் ஆறு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதனால் கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. #polimer #polimernews #viluppuram #kids #rip #electricity #electricshock

5/20/2024, 4:54:49 AM

டாஸ்மாக் தவிர, வேறு வகைகளில் வருவாய் ஈட்டும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். #polimer #polimernews #tasmac #seeman #ntk #naamtamilarkatchi #tamilnadugovernment #income

5/20/2024, 4:38:33 AM

திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து பிரசவிக்கும் பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தகவல்... கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம், பிறக்கும் குழந்தையையும் பாதிக்கும் வாய்ப்புள்ளதாகவும் கருத்து.... #polimer #polimernews #marrige #pregnancy #bloodpressure #doctors

5/20/2024, 4:29:10 AM

நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் 5 கிராம் அளவுக்கு இருக்க வேண்டிய உப்பு, இந்தியாவில் 10 கிராம் முதல் 12 கிராம் வரை இருப்பதாகவும் இதனால் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உருவாவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர்கள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். #polimer #polimernews #doctors #food #salt

5/20/2024, 4:23:28 AM

உத்தர பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு ஆதரவாக ஒரு நபர் 8 வாக்குகள் செலுத்தியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவை பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அரசு இயந்திரங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஜனநாயகத்தைச் சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாகவும், அழுத்தத்தினால் தேர்தல் அதிகாரிகள் தங்களுடைய பொறுப்புகளை மறந்துவிடக் கூடாது என்றும் ராகுல் காந்தி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை என்று உத்தர பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். #polimer #polimernews #uttarpradesh #voting #election2024 #fakevoting #arrest

5/20/2024, 4:14:28 AM

மக்களவைக்கான 5ஆம் கட்டத் தேர்தலில் 8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது ஒடிஸா சட்டசபைக்கு இரண்டாம் கட்டமாக 35 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது வாக்குச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்புடன், காலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர் 5ஆம் கட்ட தேர்தலில், ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, உமர் அப்துல்லா உட்பட 695 பேர் போட்டி 18ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் நடத்தப்பட்டு வருகிறது; இதுவரை 4 கட்டங்கள் நிறைவு 5வது கட்டமாக 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு; 8 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 695 வேட்பாளர்கள் போட்டி தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு - பதற்றமான வாக்குச்சாவடிகளில், துணை ராணுவப் படையினர் குவிப்பு #polimer #polimernews #election #election2024 #5thphaseelection

5/20/2024, 4:01:29 AM

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வளாக நடைபாதையில் படுத்துறங்கியவர்கள் மீது ஆசிட் வீச்சு...... குழந்தைகள் உட்பட 5க்கும் மேற்பட்டோர் காயம்........ போலீசார் தீவிர விசாரணை..... #polimer #polimernews #chennai #acid #injury

5/20/2024, 3:34:18 AM

இன்றைய Motivation..📷 #polimer #polimernews #TamilQuotes #TamilMotivationQuotes #PolimerMotivation #MotivationalQuotes

5/20/2024, 3:30:12 AM

ராஜஸ்தான் - கொல்கத்தா ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிப்பு.. #polimer #polimernews #rrvskkr #rajastanroyals #kolkataknightriders #ipl2024

5/20/2024, 2:53:40 AM

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பீமன் அருவியில் வெள்ளப்பெருக்கு.. தொடர் மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு #polimer #polimernews #tiruvannamalai #javvadumalai #bhimanfalls #flood

5/19/2024, 6:59:20 PM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் இலவச தரிசனம் தற்காலிகமாக ரத்து... திங்களன்று காலை 6 மணிக்கு வரிசைக்கு வர வேண்டும் என தேவஸ்தானம் அறிவிப்பு #polimer #polimernews #tirumalatemple #tirupatibalaji #tirumalahills #tirupatidevasthanam

5/19/2024, 6:45:09 PM

கிழக்குக் கடற்கரை சாலையில் விலை உயர்ந்த பைக்குகளில் அதிவேகத்தில் பந்தயத்தில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி செயல்பட வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தல் #polimer #polimernews #ecr #bikeracing #trafficpolice #instructions

5/19/2024, 6:33:46 PM

சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் தவறி விழுந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையின் தாய் கோவை காரமடையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் சிலர் குழந்தையின் தாய் ரம்யா குறித்து மோசமாக கருத்து பதிவிட்டதாகவும், இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு ரம்யா சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை காரமடையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்ற ரம்யா, வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டுக் கொண்டார் #polimer #polimernews #coimbatore #chennai #rescue #rescuebaby #hateraid

5/19/2024, 5:58:59 PM

கவுகாத்தி மைதானதில் மழை ஓய்ந்துள்ளதால், கவர்களை அகற்றும் பணியில் மைதான ஊழியர்கள்.. #Polimer #PolimerNews #RRvsKKR #Toss #IPL2024

5/19/2024, 5:30:35 PM

கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்றும் படத்தின் முதல் பாடல் மே 22 ல் வெளியாக உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது #polimer #polimernews #indian2 #kamalhassan #directorshankar

5/19/2024, 4:46:11 PM

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை தூத்துக்குடி வனஉயிரின சரகத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் கடலில் விட்டனர். பிக்மி கில்லெர் வேல் எனப்படும் இந்த வகை திமிங்கலம் இந்திய கடல் பகுதியில் மிக அரிதாகவே தென்பட்டுள்ள நிலையில், கரையோரம் வந்த மேலும் இரண்டு திமிங்கலங்களுடன் சேர்ந்து ஆழ்கடலுக்குச் சென்றது #polimer #polimernews #ramanathapuram #pygmykillerwhale #wildlifecargo #releasedback #sea

5/19/2024, 4:25:02 PM

ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேடு கிராமத்தில் 17 வயது சிறுமிக்கும் 37 வயது நபருக்கும் நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் பேரில் குழந்தைகள் நல அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி சிறுமியை மீட்டதோடு, குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் குடும்பத்தினரிடம் எடுத்துரைத்தனர் #polimer #polimernews #ranipet #childmarriage

5/19/2024, 4:07:25 PM

பஞ்சாப் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது ஐதராபாத் அணி #Polimer #PolimerNews #SRHvsPBKS #IPL2024

5/19/2024, 3:58:41 PM

பஞ்சாப் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி #Polimer #PolimerNews #SRHvsPBKS #IPL2024

5/19/2024, 3:45:11 PM

எழும்பூரில் இருந்து கடற்கரை வரையிலான நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணிகளை அடுத்த 3 மாதங்களுக்குள் முடிக்க தெற்கு ரயில்வே திட்டம் வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை ஆகஸ்ட் முதல் சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கவும் முடிவு #polimer #polimernews #southernrailway #railwayline #egmore #velachery #chennaifort #railwaystation #flyingtrain

5/19/2024, 3:40:59 PM

மழை காரணமாக ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டிக்கான டாஸ் ஒத்திவைப்பு #Polimer #PolimerNews #RRvsKKR #Toss #IPL2024

5/19/2024, 3:38:13 PM

திருவள்ளூர் மாவட்டம் வாணிச்சத்திரத்தில், கடையை மூடும் நேரத்தில் கேட்கப்பட்ட கடுகை தராததால் மளிகைக் கடை ஊழியரை தாக்கியதாக 10 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். கடையை மூடுமாறு உரிமையாளர் இசக்கிமுத்து கூறிச் சென்ற நிலையில் ஊழியர் ஜோதிலிங்கம் அதற்கான பணியில் ஈடுபட்டிருந்த போது வந்த ஒருவர் கடுகு கேட்டுள்ளார். கணக்கு முடிக்கப்பட்டு விட்டதாக கூறியதும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே செல்ஃபோன் மூலமாக தனது நண்பர்களை வரவழைத்து ஊழீயர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது #polimer #polimernews #thiruvallur #mustard #grocerystore #assault

5/19/2024, 3:24:26 PM

நடிகர் அஜித் குமார் நடிக்கும் Good Bad Ugly படத்தின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு #Polimer #PolimerNews #ActorAjithKumar #GoodBadUgly #AdhikRavichandran #TamilCinema

5/19/2024, 3:02:19 PM

மதுரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. தண்ணீர் புகுந்து சில இருசக்கர வாகனங்கள் பழுதானதால் வாகன ஓட்டிகள் தள்ளிச் சென்றனர். அரசு தலைமை மருத்துவமனை முன்புள்ள பேருந்து நிறுத்தம் முன்பாக முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி நின்றதால் நோயாளிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டனர் #polimer #polimernews #madurai #heavyrain #rain #motorists #breakdown

5/19/2024, 2:44:33 PM

பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து, சுங்குவார்சத்திரம் அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கியதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். பேருந்தை ஓட்டுநர் அதிவேகமாக இயக்கியதே விபத்துக்கு காரணம் என விசாரணைக்குப் பிறகு போலீசார் தரப்பில் கூறப்பட்டது #polimer #polimernews #kanchipuram #omnibus #accident #overspeed

5/19/2024, 2:24:57 PM

அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் டக் அவுட் #Polimer #PolimerNews #TravisHead #SRHvsPBKS #IPL2024

5/19/2024, 2:01:51 PM

நீங்கள் செய்யும் செயலில் நேர்மை இருந்தால் கடவுள் உங்களுடன் துணை நிற்பார்; நாங்கள் நேர்மையாகவும், கடின உழைப்பை செலுத்தி விளையாடியதால் அதன் பலனை பெற்றோம்: விராட் கோலி #Polimer #PolimerNews #ViratKohli #RCBvsCSK #IPLPlayOff #IPL2024

5/19/2024, 1:55:41 PM

ஐதராபாத் அணிக்கு 215 ரன்கள் இலக்கு! #Polimer #PolimerNews #SRHvsPBKS #IPL2024

5/19/2024, 1:44:10 PM

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தோனி மற்றும் ரெய்னா #polimer #polimernews #bangalore #chennai #chennaisuperkings #csk #raina #sureshraina #msdhoni #dhoni #mahendrasinghdhoni

5/19/2024, 1:40:01 PM

ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு புதிய அரசு பொறுப்பேற்றதும் ஊழல்வாதிகள் ஆயுள் சிறையில் இருக்க நேரிடும் என்று பிரதமர் மோடி பேசினார். மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சந்தேஷ்காளியில் துயரத்தை அனுபவித்த பெண்களை ஏளனமாகவும் கேவலமாகவும் பேசும் திரிணமூல் காங்கிரசை தங்கள் வாக்குகள் மூலம் பெண்கள் ஒழிப்பார்கள் என்றார். #Polimer #PolimerNews #PMModi #BJP #ParliamentElection2024

5/19/2024, 1:36:44 PM

முன்னாள் ஆர்சிபி வீரர் கிறிஸ் கெய்லுடன் விராட் கோலி #polimer #polimernews #rcb #chrisgayle #viratkohli #kohli #gayle #royalchallengersbangalore

5/19/2024, 1:35:40 PM

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கடந்த மாதம் இறந்து கிடந்த யானையின் தந்தங்களை வெட்டிக் கடத்திய வழக்கில், கர்நாடகாவைச் சேர்ந்த பொம்மன் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 யானை தந்தங்களை பறிமுதல் செய்யப்பட்டன. அவர் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 4 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர் #polimer #polimernews #erode #elephanttusks #smuggling #arrest

5/19/2024, 1:22:57 PM

உலக ஹெவிவெயிட் குத்துச் சண்டை போட்டியில் பிரிட்டன் வீரர் டைசன் ப்யூரியை வீழ்த்தி உக்ரைன் வீரர் ஒலெக்சாண்டர் உசேக் அபாரம் கடந்த 24 ஆண்டுகளில் நான்கு உலகக் குத்துச் சண்டைப் பதக்கங்கைளைக் கைப்பற்றி ஒலெக்சாண்டர் உசேக் சாதனை #polimer #polimernews #usyk #beats #fury #heavyweight #champion

5/19/2024, 1:09:11 PM

கொல்கத்தா துணை பயிற்சியாளருடன் தனிப்பட்ட முறையில் உரையாடியதை ஒளிபரப்பியதற்கு தனிப்பட்ட உரிமையை மீறியதாக ரோஹித் சர்மா கண்டனம்... தனிப்பட்ட உரையாடலை ஒளிபரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட பிறகும் ஒளிபரப்பியதாக ரோஹித் ஷர்மா வருத்தம்... போட்டி அல்லது பயிற்சியின் போது சக வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடுவதையும் கேமராக்கள் பதிவு செய்வதாகவும் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை எளிதில் ஆகிவிட்டதாகவும் பதிவு... இது போன்று பிரத்தியேக காட்சிகள்,பார்வைகள் மீது மட்டுமே கவனம் செலுத்துவது கிரிக்கெட் வீரர்கள்,கிரிக்கெட் மற்றும் ரசிகர்கள் இடையே உள்ள நம்பிக்கையை ஒருநாள் உடைக்கும் என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்... ரோகித் சர்மா ஒரு போட்டியில் கொல்கத்தா வீரருடன் உரையாடியது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது... #Polimer #PolimerNews #MIvsKKR #RohitSharma #IPL2024

5/19/2024, 1:08:26 PM

நடராஜன் பந்துவீச்சில் அதர்வா அவுட் #Polimer #PolimerNews #Atharva #SRHvsPBKS #IPL2024

5/19/2024, 12:46:21 PM

விடுமுறை நாள் என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காலை முதல் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்ததால் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். #polimer #polimernews #tiruvannamalai #temple #tiruvannamalaitemple #devotees #crowd

5/19/2024, 12:39:36 PM

காமிக்ஸ் பூனையான கார்ஃபீல்ட் போன்ற தோற்றம் கொண்ட நிஜ பூனையை தேர்வு செய்யும் போட்டி மலேசியாவில் நடத்தப்பட்டது. செபாங் நகரில் அரங்கு ஒன்றில் மலேசிய பூனை கிளப் சார்பில் நடத்தப்பட்ட அப்போட்டியில் கார்ஃபீல்டின் குணாதிசயங்களான சோம்பேறித்தனம், சிடுமூஞ்சித்தனம், குண்டான உடல் வாகு போன்றவற்றைக் கொண்ட ஹரா என்ற பூனை நிஜ கார்ஃபீல்டாக தேர்வு செய்யப்பட்டது. ஹரா பூனைக்கு 500 மலேசிய ரிங்கிட் ரொக்கம் மற்றும் உணவுகள் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் போது சாலையில் இருந்து மீட்கப்பட்ட பூனைகளை சிலர் தத்து எடுத்து சென்றனர் #polimer #polimernews #garfield #lookalike #competition #malaysia

5/19/2024, 12:37:08 PM

நடிகர் அஜித் குமார் நடிக்கும் Good Bad Ugly படத்தின் அப்டேட் இன்று மாலை 6.31 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு #Polimer #PolimerNews #GoodBadUgly #ActorAjithKumar #TamilCinema

5/19/2024, 12:11:47 PM

பருவதமலையில் 4.88 லட்சத்தில் இடிதாங்கி 🙏🏻 சரி செய்யப்பட்டது 🙏🏻 #paruvathamalai_hills🌩️ #paruvathamalai #paruvathamalai👣👣 #paruvathamalai_hills🌩️❣️ #paruvathamalaiofficial #paruvathamalai_hills #paruvathamalai🙏🙏🙏 #paruvãthamalaì🔱🕉___🛐🔥 #paruvadhamalai🎴 #paruvathamalai_hills🏞️_trip🔥😈 #paruvadhamalai🙏_trip_⛰️ #paruvãthamalaì🔱🕉___🛐🔥 #polimernews #polimer #post #velliyangirihills #velliyangiri #velliyangiritemple #velliangiri #today #agathiyar #sathuragiri #thunder #light

5/19/2024, 12:07:33 PM

தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தகவல்.. இன்று முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு... #Polimer #PolimerNews #WeatherUpdate #HeavyRain #TNRains

5/19/2024, 11:57:26 AM

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை எதிரொலி பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு 2 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்ப்பட்டுள்ளதாக அரசு தகவல் #polimer #polimernews #westernghats #Rain #warning #SMS #heavyrain

5/19/2024, 11:54:18 AM

ரேபரேலி தனது பாட்டி தொகுதி, அம்மாவின் தொகுதி என ராகுல் காந்தி பிரச்சாரம் செய்வதாக பிரதமர் மோடி விமர்சனம்... காங்கிரஸ் ஆட்சிகளின்போது 18ஆம் நூற்றாண்டின் நிலையே ரேபரேலியின் 18,000 கிராமங்களில் நீடித்ததாக குற்றச்சாட்டு... #Polimer #PolimerNews #PMModi #BJP #RahulGandhi #Congress #Raebareli

5/19/2024, 11:47:43 AM

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு #Polimer #PolimerNews #SRHvsPBKS #Toss #IPL2024

5/19/2024, 11:39:17 AM

சேலம் மாவட்டம் இருப்பாளியில் மதுபோதையில் ஆபாசமாக பேசி சண்டையிட்ட தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக அவரது மகன் கைது செய்யப்பட்டார். தருமபுரியைச் சேர்ந்த தனலட்சுமி தனது கணவர் வெங்கடேஷ் மகன் தாமரைச் செல்வனுடன் இருப்பாளியில் உள்ள தனது தந்தை வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது, அவர்கள் மது அருந்தி விட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. தான் கூறியும் கேட்காமல் மதுவை குடித்து விட்டு தகராறு செய்ததால் தாயை கத்தியால் வெட்டியதோடு, தந்தையையும் துரத்திச் சென்று தாமரைச் செல்வன் வெட்டியதாக கூறப்படுகிறது. படுகாயத்துடன் மீட்கப்பட்ட வெங்கடேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் #polimer #polimernews #salem #drunken #alcoholconsuption #mother #son #father #dispute

5/19/2024, 11:16:42 AM

சென்னை (12 முறை) மற்றும் மும்பை (10 முறை) அணிகளுக்கு அடுத்தபடியாக அதிகமுறை பிளேஆஃப்-ற்கு பெங்களூரு அணி (9 முறை) சென்றுள்ளது..!! #polimer #polimernews #rcb #royalchallengersbangalore #playoffs

5/19/2024, 10:32:47 AM

சென்னை கொடுங்கையூரில் நண்பரின் வீட்டிற்குச் சென்று மது அருந்தி விட்டு அவரது தாயாரையே ஆபாசமாக பேசிய தொழிலாளியை அவரது நண்பரே வெட்டிக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் தனது வீட்டின் மொட்டை மாடியில் நண்பரான சரவணனுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. போதையில் இருந்த சரவணன், ரஞ்சித்குமாரின் தாயை ஆபாசமாக பேசியதால் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து அவரை வெட்டிக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர். #Polimer #PolimerNews #Chennai #Friend #SayNoToAlcohol

5/19/2024, 10:30:49 AM

ஆஸ்திரேலியா அணியின் இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியின் ரிஷவ் வீரராக அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்லவுள்ளதாக தகவல் #polimer #polimernews #australia #jakefrasermcgurk #westindies #australia

5/19/2024, 10:18:06 AM

பணி முடித்து பேருந்தில் சென்றபோது துப்பாக்கி வெடித்தது பள்ளத்தில் பேருந்து ஏறி இறங்கியதில் துப்பாக்கி வெடித்திருக்கலாம் எனத் தகவல் கைத்துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் ராணுவ வீரர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார் #Polimer #PolimerNews #Chengalpattu #Soldier #Bus #Gun

5/19/2024, 10:18:03 AM

தென்மேற்கு பருவமழை குமரிக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதி, மாலத்தீவு பகுதிகளில் தொடங்கியது... 3 நாட்கள் முன்கூட்டியே பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.. #Polimer #PolimerNews #SoutherWestMonsoon #WeatherUpdate #Rain

5/19/2024, 9:51:32 AM

டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றடைந்த ஆப்கானிஸ்தான் அணி #Polimer #PolimerNews #Afghanistan #T20WorldCup2024

5/19/2024, 9:15:46 AM

அ.தி.மு.க பிரிவதற்கு பிள்ளையார் சுழி போட்ட ஓ.பி.எஸ்ஸை ஒரு போதும் கட்சியில் இணைக்க மாட்டோம் என எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மதுரை வீரர்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்று பேட்டியளித்த உதயகுமார், ஓபிஎஸ்ஸை இணைப்பது மூலம் மீண்டும் ஒரு விஷப்பரீட்சைக்கு அதிமுக தாயாராக இல்லை என கூறினார். #Polimer #PolimerNews #OPanneerSelvam #RBUdhayakumar #AIADMK

5/19/2024, 8:51:38 AM

பெங்களூரில் தனது குடும்பத்துடன் தோனி! #polimer #polimernews #bengaluru #msdhoni #sakshidhoni

5/19/2024, 8:31:29 AM

இந்தோனேசியாவின் மவுன்ட் இபு எரிமலை 5 நாட்களில் இரண்டாவது முறையாக வெடித்தது... தீப்பிழம்பை எரிமலை கக்கியபோது மின்னல்கள் ஏற்பட்ட காட்சியை வெளியிட்டது இந்தோனேசிய புவியியல் அமைப்பு... #Polimer #PolimerNews #MountIbu #Indonesia #VolcanoEruption #WorldNews

5/19/2024, 8:29:30 AM

திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் பக்தர்கள் புனித நீராட தடை... உடல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாக புகார் எழுந்ததால் கோயில் நிர்வாகம் நடவடிக்கை... #polimer #polimernews #tuticorin #tiruchendur #tiruchendurtemple #jellyfish

5/19/2024, 8:20:50 AM

தோனி சிக்சரை மைதானத்துக்கு வெளியே அடித்ததன் காரணமாக ஆர்.சி.பிக்கு புதிய பந்து கிடைத்தது; மைதானத்துக்கு வெளியே சென்ற ஈரமான பந்தைவிட புதிய பந்தில் எளிதாக பந்துவீச முடிந்தது: தினேஷ் கார்த்திக் #Polimer #PolimerNews #MSDhoni #RCBvsCSK #DineshKarthik #IPL2024

5/19/2024, 7:59:28 AM

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கு... வழக்கில் ஆஜராகாமல் இருக்க தொடர்ந்து விலக்குக் கோரியதால், ராகுலுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்தது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்.... #Polimer #PolimerNews #RahulGandhi #Congress #AmitShah #BJP

5/19/2024, 7:54:30 AM

விக்கெட் ஆவதற்கு முன்பு ஒரு சிக்ஸர் வெளியே அடித்ததை பார்த்தவுடன் இவருக்கு ஓய்வு இல்லை என உறுதி செய்து விட்டேன்: ஜெயக்குமார் எக்ஸ் தளத்தில் பதிவு #polimer #polimernews #mahendrasingdhoni #dhoni #msdhoni #chennaisuperkings #csk

5/19/2024, 7:34:08 AM

வாழ்க்கை ஒரு வட்டம்... #polimer #polimernews #IPL2024 #RCBvsCSK #Rain #CSKvRCB #CSK #ViratKohli #Bangalore

5/19/2024, 7:27:39 AM

நேற்றைய போட்டியின்போது.. #polimer #polimernews #RCBvsCSK #viratkholi #fafduplessis

5/19/2024, 7:10:39 AM

சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம்... திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் #polimer #polimernews #Vadapalani #MurugarTemple #VaigasiVisagam

5/19/2024, 6:27:46 AM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்... இலவச தரிசனத்தில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வரும் பக்தர்கள்.. திருப்பதி கோயிலில் நேற்று ஒரே நாளில் 90,721 பக்தர்கள் சாமி தரிசனம் உண்டியல் காணிக்கையாக ரூ.3.28 கோடியை பக்தர்கள் செலுத்தி உள்ளனர் #polimer #polimernews #tirupatitemple #temple #devotees

5/19/2024, 6:27:37 AM

ரிங்கு சிங்-ன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவு #polimer #polimernews #rinkusingh #instagramstory #yashdayal

5/19/2024, 6:16:48 AM

ஆர்.சி.பி எனக்கு நிறைய ஆதரவளித்தது; நான் ஒரு முக்கியமான வீரர் என சொன்னார்கள்; எல்லா இளைஞர்களுக்கும் ஆதரவு கொடுத்தார்கள்; அது ஆட்டத்தின் முடிவுகளில் தெரிகிறது: யாஷ் தயாள் #polimer #polimernews #yashdayal #rcb #royalchallengersbangalore

5/19/2024, 6:06:47 AM